Wednesday, April 24, 2013

”புதிய தலைமுறை” தொலைக்காட்சியில் நமது காந்தியடிகள் நற்பணிக் கழகம் பற்றிய செய்தி

புதிய தலைமுறை -  உண்மை உடனுக்குடன்

கற்க கசடற 04-03-2013

http://puthiyathalaimurai.tv/video-archive?vid=karka&pres=2013&month=apr&paging=4&video=KAR-20130404SEG2






                           "காலணி வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனம் வழங்கும் பட்டப் படிப்புகள்..,      தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற உயர் கல்வி குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதம் குறித்த தகவல்கள்..,            National Power Training Institute வழங்கும் முதுநிலை பட்டயப் படிப்புகள்..,                   ஏழை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச கல்வி சேவை...                        உள்ளிட்ட பல செய்திகளை இன்றைய கற்க கசடற நிகழ்ச்சியில் பார்க்க இருக்கிறோம்."

Friday, April 5, 2013

”புதிய தலைமுறை” தொலைக்காட்சியில் நமது காந்தியடிகள் நற்பணிக் கழகம் பற்றிய செய்தி



38 ஆண்டுகளாக இலவச கல்வி வழங்கும் காந்தியடிகள் நற்பணி கழகம்




நன்றி



பதிவு செய்த நாள் - ஏப்ரல் 04, 2013, 9:07:17PM



கல்விக்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்பித்து வருகிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒருவர். காந்தியடிகள் நற்பணி கழகம் என்ற பெயரில் வழங்கப்படும் சிறப்பான கல்விச் சேவை குறித்த செய்தி தொகுப்பு.


குடும்பத்தின் பொருளாதார நிலையே, மாணவனின் கல்வித் தகுதியை தீர்மானிக்கும் நிலை பல காலமாகவே இருந்து வருகிறது. மாணவர்களின் படிப்பின் உயரத்தை பணம் தீர்மானிக்கக் கூடாது என்ற நோக்கில், கும்பகோணத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் தனது 3 நண்பர்களுடன் இணைந்து, காந்தியடிகள் நற்பணி மன்றம் என்ற இலவச கல்வி மையத்தை உருவாக்கியுள்ளார். கடந்த 38 ஆண்டுகளாக, தன்னார்வலர்கள் மற்றும் இங்கேயே படித்து முடித்தவர்ளைக் கொண்டு, குடந்தையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கல்வி தாகத்தை போக்கியிருக்கிறது இந்த அமைப்பு.

1975-ஆம் ஆண்டு சிறிய வாடகைக் கூடத்தில் தொடங்கப்பட்டு, பொதுமக்களின் நன்கொடை உதவியுடன் 12 வகுப்பறைகள் கட்டப்பட்டு, இங்கு கல்விச் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் ஏற்கெனவே இங்கு படித்து, அரசுப் பணி உள்ளிட்ட பணிகளில் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பம்சம். தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இங்கு வகுப்புகளை நடத்துவது மிகுந்த ஆத்ம திருப்தியை அளிப்பதாக தெரிவிக்கின்றனர் இவர்கள்.



மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்பதோடு இங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் ஊதியம் பெறுவதில்லை என்பது இந்த அமைப்பின் சேவைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. தங்கள் அமைப்பில் படித்தவர்கள் சமூக விழுமங்களை பின்பற்றுபவர்களாக அடிப்படைடையில் இருந்தே உருவாக்கப்படுகின்றனர் என்கின்றார் பாலசுப்ரமணியன்.

காந்தியடிகள் நற்பணிகழகத்தில் இந்தி வகுப்புகளும், போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ள பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பார்கள், பாலசுப்ரமணியன் போன்ற மனிதர்கள் அதிகரித்தால் அனைவருக்கும் இலவசக் கல்வி உண்டு என்பது நிச்சயம்.

Friday, March 22, 2013

2013 ஆம் ஆண்டு ப்ரவீண் பட்ட வகுப்பு - விடையாற்று விழா

தேனுகா, பாலுஜி, மோகன், ராதாகிருஷ்ணன்
மாணவியர்கள் & ஆசிரியைகள்

ஆசிரியைகள்

ஆசிரியர்கள்


Wednesday, August 15, 2012

சுதந்திர தின விழா கொண்டாட்டம் - 15 - 08 - 2012


குடந்தை காளசந்தி கட்டளைத் தெருவில் அமைந்துள்ள இலவச கல்வி நிறுவனமான காந்தியடிகள் நற்பணிக் கழகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கழக அமைப்பாளர் கு. பாலசுப்ரமணியன் தலைமை ஏற்றார். கழக ஆசிரியர் இராதாகிருஷ்ணன் வரவேற்றார். கலை விமர்சகர் தேணுகா தேசியக்கொடி ஏற்றி சிறப்புரை ஏற்றினார்.

ராஜூ, ராதாகிருஷ்ணன், தேனுகா, பாலுஜி
தேனுகா, பாலுஜி,

           ” சுதந்திரம் என்பது விருப்பம்போல இருப்பது அல்ல. சுதந்திரத்திற்கான உண்மையான அர்த்தம் கட்டுப்பாடுடன் இருத்தல் மற்றும் கட்டுப்பட்டு நடத்தல் ஆகும். சான்றோர்கள், நல்லவர்கள், நல்ல தலைவர்கள் போன்றோரின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும். காந்தி, நேரு, திலகர் போன்றோரின் வார்த்தைகளின்படி மக்கள் நடந்த காரணத்தால் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த்து. ஆனால் இன்றைய சுதந்திர இந்தியாவில் இளைய தலைமுறையினர் சுதந்திரம் என்ற பெயரில் யாருக்கும் கட்டுப்படாமல் மனம்போன போக்கில் அலைகின்றனர். போதையின் பாதையில் போகின்றனர், வழிகாட்ட நல்ல தலைவர்கள் இப்போது இல்லை. இளைஞர்கள் தங்களது வாழ்க்கை முறையினை மாற்றி சுயகட்டுப்பாடு, நல்ல கல்வி, ஒழுக்கம், நல்ல குறிக்கோள், நல்ல பாதை, போன்றவற்றோடு வாழ்க்கையினை அமைத்துக் கொண்டு முன்னேறினால் இந்தியா நிச்சயம் வல்லரசாக மாறி உலகிற்கே தலைமை ஏற்கும்.”





           கழக ஆசிரியர்கள் செல்வம், குருபிரசாத், சோமசுதர்ஸன், புவனா, புஷ்பாதேவி, அறிவுக்கரசி, செல்லநாகலட்சுமி ஆகியோர். பங்கேற்றனர். கழக ஆசிரியர் ராஜீ நன்றி கூறினார்.

Friday, July 8, 2011

காந்தியடிகள் நற்பணிக் கழகம் in "www.thesundayindian.com"

www.thesundayindian.com/ta/story/கண்ணைத்-திறக்கும்-கல்விக்கூடம்/13/664/

கண்ணைத் திறக்கும் கல்விக்கூடம்


சுந்தரபுத்தன்
ஜூன் 30, 2011 11:34

கும்பகோணம் கும்பேஸ்வரன் தெருவுக்குப் பின்னே இருக்கிறது காலசந்தி கட்டளைத் தெரு. அதற்கு என்ன முக்கியத்துவம்? அங்குதான் பள்ளியை பாதியில் விட்டவர்கள், மழைக்குக்ல்கூட பள்ளியில் ஒதுங்காதவர்களுக்கான காந்தி நற்பணிக்கழக இலவசப் பள்ளி இருக்கிறது. எல்லோரும் வேலைகள் முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் பள்ளி தொடங்குகிறது. தினமும் அப்படித்தான்.





"என்னோட கிராமம் செம்பியன்மாதவி. சிறுவயதிலேயே கும்பகோணத்துக்கு வந்துவிட்டேன். குடும்பச் சூழல் காரணமாக படிக்க முடியவில்லை. அப்பாவின் மளிகைக் கடையில் வேலை பார்த்தேன். ஆனால் படிப்புமீதான ஆசை மட்டும் குறையாமல் இருந்தது. வேலை பார்த்துக்கொண்டே பொலிடிக்கல் சயன்ஸில் பி.ஏ. படித்தேன். பிறகு இந்தியில் எம்.ஏ., படித்துமுடித்தேன். அந்த நேரத்தில்தான் நம்மை மாதிரி படிக்காத ஏழை குழந்தைகளுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. என்னை மாதிரி சில நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கியதுதான் காந்தியடிகள் நற்பணிக் கழகம்" என்று சொல்லத் தொடங்குகிறார் ஒரு மாலை நேர வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த கு. பாலசுப்ரமணியன். அவர்தான் பள்ளியின் நிறுவனர். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய அறையில் முளைத்த கனவு அது.

காந்திய கொள்கைகளில் ஈடுபாடுள்ள அவர், ஒரு படிப்பகத்தில் ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து மாலை நேர இலவச வகுப்புகளை நடத்தினார். எஸ்எஸ்எல்சியில் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் படிக்க டுடோரியலில் அதிகமாக பணம் கேட்பார்கள். அதோடு ஒரு பாடத்தில் தோல்வி என்றால் எல்லா பாடங்களையும் எழுதவேண்டிய நிலையும் இருந்தது. அந்த காலகட்டத்தில் ஓர் அமுதசுரபி போல கு.பாலசுப்ரமணியனின் காந்தி நற்பணிக் கழகம் செயல்படத் தொடங்கியுள்ளது. "ஆரம்பத்தில் மாதாகோயில் தெருவில் முதியோர் கல்வி வகுப்புகளை நடத்தினேன். மக்களின் ஒத்துழைப்பு இ¢¢லை. பிறகுதான் பள்ளி மாணவர்களுக்கு இலவச இந்தி வகுப்புகளை நடத்தினோம். நல்ல வரவேற்பு. அதுதான் இன்று ஒரு பள்ளியாகவே உருவெடுத்திருக்கிறது. மாலையில் 6 மணிக்கு ஆரம்பித்து 10 மணிவரை வகுப்புகள் நடக்கும். காலையில் வகுப்புகள் உண்டு" என்கிறார்.



ஜெயப்பிரகாஷ் நாராயணின் பீகார் இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட அவர், மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கும்போது காந்திய சிந்தனைகளை சொல்லாமல் இருப்பதில்லை. வாழ்வில் எளிமையும் சேவை மனமும் ஊழலற்ற மனநிலையும்தான் முக்கிய கல்வியாக இருக்கமுடியும் என¢று நம்புகிறார். இவர்களது பணியைப் பார்த்த பனாரஸ் மஹால் ஜவுளிக்கடை அதிபர் தாமாக முன்வந்து வகுப்பு நடத்துவதற்கான அறைக்கு வாடகைப் பணம் கொடுத்து உதவியுள்ளார். இப்படி படிப்படியாக நடந்த இலவச வகுப்புகள் பற்றிய செய்தி நகரெங்கும் பரவ கோயில் நகரில் காந்தி நற்பணிக் கழகமும் நகரின் பெருமையாக மாறியிருக்கிறது. ஒரு பெரும் பொருளாதாரப் போராட்டத்துக்குப் பிறகு தற்போது சொந்த கட்டடத்தில் இயங்குகிறது.

இங்கு நேரடியாக எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்வெழுத படிப்பவர்கள் அதிகம். நெசவாளர் குடும்பங்களில் 'சீடா' போடும் பணிக்காக குழந்தைகளைப் பயன்படுத்துவது பழக்கம். அதனால் படிப்பு பாதியில் நிறுத்தப்படும் அல்லது பள்ளிக்கே அனுப்பமாட்டார்கள். மற்றும் சிறு வயதிலேயே வேலைக்கு அனுப்படும் ஏழைக் குழந்தைகள். இவர்கள்தான் இப்பள்ளியின் இலவச வகுப்புகளின் மாணவர்கள். இந்த மாணவர்களின ஆர்வத்தை சொல்லிமாளாது என்கிறார் அங்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர் ஐயப்பன். ஒரு தனியார் பள்ளியில் பணிபுரியும் இவரைப் போன்ற பலரும் மாலை நேரம் வகுப்புகளை ஊதியமில்லாமல் நடத்துகிறார்கள். "நாங்களும் இங்கதான் இந்தி படிச்சோம். நம்முடைய பங்களிப்பு ஏதாவது இருக்கவேண்டும் என்று நினைத்தோம். இருபது ஆண்டுகளாக வகுப்புகளை நடத்திவருகிறோம். எதையும் எதிர்பார்த்து செய்யவில்லை. எங்களுக்கு ஆத்மதிருப்தி கிடைக்கிறது. அதுவே போதும்" என்று சொல்கிறார் பாலவெங்கட மாணிக்கம், ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிகிறார்.

இந்தப் பள்ளியில் 300 மாணவ மாணவிகள் இந்தி வகுப்பில் படிக்கிறார்கள். இளம் மனங்களில் காந்திய சிந்தனையைப் பரப்புவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார் கு.பாலசுப்ரமணியன். தாங்கள் பணிநேரம் போக ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் தன்னிச்சையாக வந்து ஊதியம் பெறாமல் வகுப்பு நடத்துகிறார்கள். தேறமாட்டான் என்ற பெயரெடுத்த இளைஞர் சுப்ரமணி. காந்தியடிகள் நற்பணிக் கழகம்தான் தன்னை ஒரு மனிதனாக உயர்த்தியது என்று பெருமிதத்துடன் தசஇயிடம் அவர் பகிர்ந்துகொண்டார். "அஆவன்னாகூட தெரியாதவனா இருந்தான். அவங்கதான் என்னை கண்ணைத் திறந்தாங்க. நேரடியாக எட்டாம் வகுப்பை முடிச்சுட்டு இந்தியில பிஏவரைக்கும் படிச்சேன். இன்னைக்கு நான் எங்க ஜவுளிக்கடையில் கணக்கு எழுதறவனா இருக்கேன். இ¢ல்லைனா துணிக்கு சாயாம் போட்டுக்கிட்டு இருந்திருப்பேன்" என்கிறார்.



காந்தியடிகள் நற்பணிக் கழகத்தில் படித்து இன்று நல்ல வேலையில் இருக்கும் பலரும் உதவி செய்கிறார்கள். புதிய கட்டடம் கட்டுவதற்காக ஒரு மாணவர் தனிப்பட்ட முறையில் 9 ஆயிரம் ரூபாய் அனுப்பியதை பெருமையுடன் சொல்கிறார்கள். ஒரு இனிப்புக் கடையில் வேலைபார்த்த வெங்கட்ராகவன் பகுதி நேரத்தில் இப்பள்ளியில் படித்து நேரடியாக எட்டாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். பிறகு பத்தாம் வகுப்பில் 429 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். பள்ளியில் சேர்ந்து பனிரெண்டாம் வகுப்பில் படித்து தேறியிருக்கிறார். "நான் படிக்கிறேன் என்பது கனவு போல இருக்கிறது. இந்த நற்பணிக் கழகத்தால் கிடைத்த பரிசு அது. பிஏ சமூகவியல் படிக்கலாம் என்றிருக்கிறேன். வீட்டிலும் ஆதரவு காட்டுகிறார்கள். எனக்கு ஐஏஎஸ் ஆகவேணடும் என்பதுதான் ஒரே இலட்சியமாக இருக்கிறது" என்கிறார் வெங்கட்ராகவன்.



கும்பகோணத்தைச் சேர்ந்த கலை விமர்சகர் தேனுகா, ''குறைந்தபட்ச நிதி ஆதாரம்கூட இல்லாமல் இயங்கும் இப்பள்ளி ஓர் அதிசயம். எங்கள் ஊருக்கே பெருமை சேர்க்கும் அடையாளமாக மாறியிருக்கிறது'' என்கிறார். மற்றப் பள்ளிகளைப் போல அல்ல. இங்கு படித்தவர்கள் வேலைக்குச் சென்ற பின்பும்கூட மாலை வகுப்புகளை நடத்த ஆர்வத்துடன் வருகிறார்கள். நன்றிக்கடன்.

Sunday, July 3, 2011

கழக கட்டடத்தின் முதல் தளம் - திறப்பு விழா




காந்தியடிகள் நற்பணிக் கழக கட்டடத்தின் முதல்  தளம் 
 11.06.2011 அன்று  திறக்கப்பட்டது

.

Saturday, November 13, 2010

34 - வது ஆண்டு விழா - 11-10-2009




 கும்பகோணம் காந்தியடிகள் நற்பணிக் கழகத்தின் 34-வது ஆண்டு விழா, காந்தி ஜெயந்தி விழா மற்றும் ஹிந்தி மாணவர் விழா 11-10-2009 ஞாயிறு மலை கும்பகோணம் ஜனரஞ்சனி ஹாலில் நடைபெற்றது.


கழக அமைப்பாளர் திரு. கு. பாலசுப்ரமணியன் அவர்கள் விழாவிற்கு தலைமை ஏற்றார் . முனைவர் திரு. மு. ராமசாமி அவர்கள் சிறப்புரை வழைங்கினார். நகரின் அறிவிற் சிறந்த பெரியோர் பலர் வாழ்த்துரை வழங்கினர். ஏராளமான கழக மாணவர்களும், உறுப்பினர்களும், ஆசிரியர்களும், கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

காந்தியடிகள் நற்பணிக் கழகம்

34 - வது ஆண்டு விழா

காந்திஜெயந்தி விழா மற்றும்

ஹிந்தி மாணவர் விழா


நிகழ்ச்சி நிரல்


தலைமை : திரு. கு. பாலசுப்ரமணியன்,

அமைப்பாளர், காந்தியடிகள் நற்பணிக் கழகம்.


கழகப் பாடல் : செல்வி. பா. புவனேஸ்வரி, செல்வி. எஸ். சூரிய பாரதி
கழக ஆசிரியைகள்.

வரவேற்புரை : செல்வி. . ஸ்ரீவித்யா
                            கழக ஆசிரியை

ஆண்டறிக்கை: திரு மா, ராஜு
                             கழக ஆசியர்

சிறப்புரை:  முனைவர் மு. ராமசாமி
கலைப் புலத் தலைவர் தமிழ் பல்கலைக்கழகம்
.

வாழத்துரை :  முனைவர் என் . காமகோடி
செயல் இயக்குனர், கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி.

திரு பிஆர். பி. வேலப்பன்
நிர்வாக இயக்குனர், கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி

திரு  எஸ். பி . இராமன்,
இயக்குனர், கும்பகோணம் பரஸ்பர சஹாய நிதி

திரு தி. மாணிக்கவாசகம், ரோட்டரி சங்கம்.

திரு த. மோகன்

திரு தேனுகா



சிறப்புரை வழங்கிய முனைவர் மு. ராமசாமி அவர்கள் நாடக கோட்பாடுகளையும் இன்றைய கல்வி முறையில் நாடகத்தின் பங்களிப்பையும், அவசியத்தையும் பற்றி பேசினார்.


.

Monday, January 4, 2010

கழக அமைப்பாளர் - திரு. கு. பாலசுப்ரமணியன்

G. BALSAUBRAMANIYAN,
ORGANISOR,
GANDHIYADIGAL NARPANIK KAZHAGAM

"BEST SOCIAL WORKER OF THE YEAR 2009" AWARD

G. BALASUBRAMANIYAN  , ORGANISOR , received the award  " BEST SOCIAL WORKER OF THE YEAR 2009 " , from  Networking and Development Center for Service Organisations, Madras,
on 03 -01- 2010

Wednesday, March 26, 2008

Creating Values - Individual Morality


GNK has been involved in the process of cultivating individual morality in the society. All social evils like poverty, corruption and war mongering nature of affluent people traces their cause to the loss of individual morality. Whatever may be the economic development of a society, when it losses it's moral, it is in brink of a collapse. Our society is in the trancient phase of development witnessing much social inequilities thereby corruption and crime. The need of the moment is uphelding individual morality. GNK is proud of being an expert in this aspect as it is doing the same for the past 30 odd years. Come let's join hands in this brave experiment and make a difference.

Monday, March 24, 2008

Contact Us

ADDRESS:
G. BALASUBRAMANIAN
38/8 , KALASANDHI KATTALAI STREET,
KUMBAKONAM,
TAMIL NADU,
INDIA.
612001.


 
PHONE NUMBER :  91 - 9952793520
                                     91 - 9443874450
EMAIL ID: gnk.kumbakonam@gmail.com


30 years of existence for a non profit organization involved in free education needs your complete support now. GNK aspires to extend it's existing building and it's area of activities. Come let’s participate in this noble cause. Please contact us if you have the resource to further this ambitious cause or if you have the need to benefit from this organisation. With your cooperation The light of literacy can shine even more brighter.

Informal Schooling

GNK organises informal schooling right from elementary stage to the X and XII level. The target groups include working people who cannot afford formal schooling due to their economic and social conditions. The classes are organised in morning and evening hours so as not to affect their work. School students who failed in the board exams are also inducted under this programme.

At present 50 students are studying under this program. The course involve no fees and teachers are working on voluntary basis. GNK has adopted its innovative educational model of “Volunteer Service - No Fee - Education to All” to serve its motto of "Economy should not be a stumbling block in education". Over the 30 years of our existence more than thousand people have benefited through this service.

Illakkiya Vattam (Literary Circle)

Illakkiya vattam is a GNK initiative to provide a platform for students and intellectuals to exchange their ideas especially in Tamil Literature. The literary gathering is organised every month in GNK premises on a particular topic with the lecture by an expert. Various dignitaries have delivered their lectures through this platform. 'Art Analyst ' Mr. Denuga has taken keen interest in this programme and is the moving spirit behind this initiative.

Some of the dignitaries made Illakkiya Vattam proud include:

writer Prabhanjan
writer S. Ramakrishnan
Mr. Aadal arasu
Sthapathy Vidhyasankar
Professor Marx
Professors of Tamil and English faculty in Kumbakonam colleges
and Many other dignitaries.