"தேனுகா" அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஊடகவியலாளர், பத்திரிக்கையாளர் மற்றும் "அருஞ்சொல்" இணைய இதழின் ஆசிரியர் திரு. சமஸ் அவர்கள் காந்தியடிகள் நற்பணிக் கழகத்தில் இன்று (19.11.2021 ) உரையாற்றினார்.
"தேனுகா" அவர்கள் நமது இசை, ஓவியம் ,சிற்பம் போன்ற விஷயங்களை மேல்நாட்டு கலைகளோடு ஒப்பிட்டு நமது பாரம்பரியத்தை போற்றினார். மேற்கத்திய கலாச்சாரத்தை கண்மூடித்தனமாக பின்பற்றாமல் அவற்றை உள்வாங்கிக் கொண்டு நமது இந்திய , தமிழக கலாச்சார மரபுகளை சீர்தூக்கிப் பார்த்து நம் மண்ணின் கலை, பண்பாட்டு உயர்வுகளை உலகறியச் செய்வதில் இறுதிவரை முனைப்போடு செயல்பட்டு வந்தார்.
இன்றைய இளைஞர்கள் சமூகப்பொறுப்பு மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான பார்வையோடு செயல்பட வேண்டும். நமது கலாச்சாரம் , பண்பாடு ஆகியவற்றை எந்நிலையிலும் பேண வேண்டும். ஆழ்ந்த வாசிப்பு, கூர்ந்து நோக்கல், கவனம் செலுத்தி செயல்படுதல் ஆகியவைகளோடு பிரச்சனைகளை எதிர்நோக்கும் மனோபலம் ஆகியவற்றை வளர்த்து கொள்ள வேண்டும். தவறான கருத்துக்களை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்பதன் மூலமே உண்மையை நிலைநாட்ட முடியும். தன் பொருளாதாரத்தை பெருக்கி கொள்ளும் அதே நேரத்தில் மனவளத்தையும் வளர்த்தெடுக்க வேண்டும். தனிமனித வளர்ச்சி என்பது ஓட்டு மொத்த சமூக வளர்ச்சியை மையமாக கொண்டு இருக்க வேண்டும்." என்று பேசினார்.













































