We are an organisation driven by GANDHIAN philosophy involved in providing free education since 1975. We have around 500 students and 25 volunteer-teachers who handle all classes without taking a single pie. Our financial sources are voluntary contributions from students, alumni and other generous noble souls. We give utmost importance to discipline and being guided by Gandhian principles, We hope to light a lamp of literacy, which though small, drives away darkness of ignorance.
Wednesday, December 26, 2012
Wednesday, August 15, 2012
சுதந்திர தின விழா கொண்டாட்டம் - 15 - 08 - 2012
குடந்தை காளசந்தி கட்டளைத் தெருவில் அமைந்துள்ள இலவச கல்வி நிறுவனமான காந்தியடிகள் நற்பணிக் கழகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கழக அமைப்பாளர் கு. பாலசுப்ரமணியன் தலைமை ஏற்றார். கழக ஆசிரியர் இராதாகிருஷ்ணன் வரவேற்றார். கலை விமர்சகர் தேணுகா தேசியக்கொடி ஏற்றி சிறப்புரை ஏற்றினார்.
![]() |
ராஜூ, ராதாகிருஷ்ணன், தேனுகா, பாலுஜி |
![]() |
தேனுகா, பாலுஜி, |
” சுதந்திரம் என்பது விருப்பம்போல இருப்பது அல்ல. சுதந்திரத்திற்கான உண்மையான அர்த்தம் கட்டுப்பாடுடன் இருத்தல் மற்றும் கட்டுப்பட்டு நடத்தல் ஆகும். சான்றோர்கள், நல்லவர்கள், நல்ல தலைவர்கள் போன்றோரின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும். காந்தி, நேரு, திலகர் போன்றோரின் வார்த்தைகளின்படி மக்கள் நடந்த காரணத்தால் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த்து. ஆனால் இன்றைய சுதந்திர இந்தியாவில் இளைய தலைமுறையினர் சுதந்திரம் என்ற பெயரில் யாருக்கும் கட்டுப்படாமல் மனம்போன போக்கில் அலைகின்றனர். போதையின் பாதையில் போகின்றனர், வழிகாட்ட நல்ல தலைவர்கள் இப்போது இல்லை. இளைஞர்கள் தங்களது வாழ்க்கை முறையினை மாற்றி சுயகட்டுப்பாடு, நல்ல கல்வி, ஒழுக்கம், நல்ல குறிக்கோள், நல்ல பாதை, போன்றவற்றோடு வாழ்க்கையினை அமைத்துக் கொண்டு முன்னேறினால் இந்தியா நிச்சயம் வல்லரசாக மாறி உலகிற்கே தலைமை ஏற்கும்.”
கழக ஆசிரியர்கள் செல்வம், குருபிரசாத், சோமசுதர்ஸன், புவனா, புஷ்பாதேவி, அறிவுக்கரசி, செல்லநாகலட்சுமி ஆகியோர். பங்கேற்றனர். கழக ஆசிரியர் ராஜீ நன்றி கூறினார்.
Subscribe to:
Posts (Atom)